• Nov 17 2024

நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஸ்டார் ஜோடியாக விளங்குபவர்கள் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவரும் நானும் ரௌடி தான் என்னும் திரைப்படத்தின் மூலம் நண்பர்களாக அறிமுகமாகி பின்பு காதலிக்க ஆரம்பித்தனர்.

பல ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்கள் இந்த மாதம் 9ம் திகதி திருமணத்தில் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். அதன்படி இவர்களின் திருமணம் திருப்பதியில் நடக்க இருக்கிறது என்று தான் முதலில் தகவல் பரவியது.

ஆனால் அதற்கு பிறகு மகாபலிபுரத்தில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது. அதை உறுதி செய்யும் விதமாக திருமணம அழைப்பிதழும் இணையத்தில் வைரல் ஆனது.

சென்னை மகாபலிபுரத்தில் இருக்கும் ஒரு 5 நட்சத்திர ஹோட்டலில் தான் திருமணம் நடைபெற இருக்கிறது. காலை 5.30 முதல் 7 மணி வரை தான் முகூர்த்த நேரம்.

நயன்தாரா தனது நிச்சயதார்த்தத்திற்கு யாரையும் அழைக்காத நிலையில் தற்போது திருமண விழாவுக்கு 200 பேரை அழைத்திருக்கிறார். அதில் விஜய், அஜித் உள்ளிட்ட தமிழ் சினிமா நட்சத்திரங்களும் உள்ளனர். சினிமா துறையினர், நண்பர்கள் என நெருக்கமானவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருக்கின்றனர்.

நயன்தாராவுக்கு நெருக்கமான சமந்தா நிச்சயம் திருமணத்தில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement