தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்னும் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் அமலாபால். இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது மைனா திரைப்படம் தான். கிராமத்துப் பெண்ணணாக நடித்த இவரது நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. அத்தோடு படவாய்ப்புக்களும் குவிய ஆரம்பித்தன.
இதையடுத்து, தலைவா, வேலையில்லா பட்டதாரி, வேட்டை போன்ற பல படங்களில் நடித்தார். தலைவா படத்தில் நடித்தபோது இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலிக்க தொடங்கி, பிறகு அவரை திருமணமும் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமணம் இரண்டே வருடங்களில் முறிந்தது.
அதன்பின் சிங்கிளாக வலம் வந்த அமலா பால், தனது நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசாய் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது கர்ப்பமாகவும் உள்ளார்.
இந்த நிலையில், பிரித்விராஜ் மற்றும் அமலாபால் நடிப்பில் இந்த வாரம் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் ஆடு ஜீவிதம். இந்த படத்தில் நடிப்பதற்காக அமலாபால் வாங்கிய சம்பள விபரம் பற்றி தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அமலாபாலின் ஆறு வருட உழைப்புக்கு பின்னர் திரையரங்கில் வெளி வரவிருக்கும் ஆடு ஜீவிதம் படத்தில் நடிப்பதற்காக அமலா பால் சுமார் 80 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் தற்போது கர்ப்பமாக இருக்கும் அமலாபால், இந்தப் படத்திற்காக ப்ரோமோஷன் செய்ய வேண்டும் என நினைத்து அதில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!