• Sep 20 2024

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க அனன்யா வாங்கிய சம்பளம்..எத்தனை கோடி தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!


தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா.தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டவர்.

இவ்வாறுஇருக்கையில் அதிரடி ஆக்சன் கலந்த நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லைகர்.இப்படத்தில் கதாநாயகியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார்.ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் விஜய் தேவரகொண்டாவின் அம்மாவாக நடித்துள்ளார்.



Puri connects மற்றும் பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.இப்படம் ஹிந்தி தெலுங்கு தமிழ் கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 25, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல நடிகர் ஆர்.கே. சுரேஷ் தனது ஸ்டூடியோ 9 நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார் என அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது



இந்நிலையில், இப்படத்தில் நடிக்க நடிகை அனன்யா பாண்டே ரூ. 3 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான லைகர், அடுத்த வாரம் 25ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement