• Sep 20 2024

கோடிகளில் புரளும் தனுஷ் - சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர் தனுஷ்.இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடும் தனுஷுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தனுஷின் சொத்து மதிப்பு, சம்பளம், கார்களின் விவரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் தனுஷ். ஹீரோக்களுக்கான எந்தவொரு அடையாளமும் இல்லாமல் சினிமாவில் அறிமுகமான தனுஷ், இன்று ஹாலிவுட் வரை மாஸ் காட்டி வருகிறார்.

தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ள அவர், D50, சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாகவே காணப்படுகிறார்.

சினிமாவில்  20 ஆண்டுகளாக பயணித்து வரும் தனுஷ், தற்போது ஒரு படத்துக்கு 25 முதல் 30 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் மாதத்திற்கு சுமார் 3 முதல் 5 கோடி வரை வருமானம் ஈட்டும் தனுஷ், ஆண்டுக்கு 80 முதல் 100 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கிறாராம். அதேநேரம், போயஸ் கார்டனில் தனுஷ் கட்டியுள்ள புதிய வீட்டின் மதிப்பு 50 கோடிக்கும் அதிகம் என சொல்லப்படுகிறது.

இதை விட சென்னையில் பல கோடி மதிப்பில் மேலும் இரண்டு பிளாட்டுகளை சொந்தமாக வைத்துள்ளாராம். அதேபோல், கார்களின் மீது அதிக ஆர்வம் உள்ள தனுஷ், 45 லட்சம் மதிப்புள்ள ஜாக்குவார், 75 லட்சம் மதிப்பில் ஃபோர்டு முஸ்டாங், 1.5 கோடி மதிப்பில் ஆடி கார் ஆகியவற்றை பயன்படுத்தி வருகிறாராம். இந்த கார்களை விடவும் 3.5 கோடி மதிப்பில் பென்ட்லி கான்டினென்டல் ஜிடி கார், 8 கோடி ரூபாய் மதிப்புடைய ரோல்ஸ் ராய்ஸ் ப்ரீமியம் பிளாக் கார் ஆகியவற்றையும் சொந்தமாக வைத்துள்ளார்.

ஆகமொத்தம் தனுஷின் மொத்த சொத்து மதிப்பு 250 முதல் 300 கோடி வரை இருக்கும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement