எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் நாவலை அடிப்படையாக கொண்டு இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. விடுதலை திரைப்படத்தை ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார்.
நான்கு கோடி ரூபாயில் விடுதலை படத்தை எடுக்க இருந்த நிலையில், அது நீண்டு கொண்டே சென்று 40 கோடியாக மாறியதால் விடுதலைப்படத்தை இரண்டு பாகமாக வெளியிட வெற்றிமாறன் முடிவு செய்தார். இதையடுத்து விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த இப்படத்திற்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
விடுதலை படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதால் இப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி இப்படம் ரிலீஸான முதல் நாளில் ரூ.3.85 கோடி வசூலித்து இருந்தது. இதையடுத்து இரண்டாம் நாளான சனிக்கிழமை 3.8 கோடியாக இருந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரித்துள்ளது அதாவது 4.75 கோடியாக உள்ளது.
எதிர்பார்த்தபடியே முதல் நாளை விட இரண்டாம் நாளில் அதிக கலெக்ஷன் அள்ளி உள்ள விடுதலை திரைப்படம் நேற்று ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருவதால் வசூலும் முதல் இரண்டு நாட்களை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விடுதலைப்படத்தின் மொத்த வசூல் 12.40 கோடியாக உள்ளது, விடுதலை படத்துக்கு கிடைக்கும் வரவேற்பால் அப்படத்திற்கு தியேட்டர்களும் அதிகரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Listen News!