• Sep 20 2024

புராஜெக்ட் கே படத்தில் வில்லனாக நடிக்க கமல்ஹாசன் கேட்டுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா?- இத்தனை கோடியா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


இயக்குநர்  நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்க கமிட்டாகியிருக்கும் திரைப்படம் தான்  புராஜெக்ட் கே.இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோன் கமிட்டாகியுள்ளார்.இதுதவிர பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

புராஜெக்ட் கே படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் இணைந்துள்ள தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் நடிகர் கமல்ஹாசன் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


 கமல்ஹாசனின் வருகையால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகவும் அதிகரித்துள்ளது. இப்படத்திற்கு கமல் வாங்கிய சம்பள விவரமும் வெளியாகி உள்ளது.அதன்படி புராஜெக்ட் கே திரைப்படத்தில் பிரபஸுக்கு வில்லனாக நடிக்க நடிகர் கமல்ஹாசன் ரூ.150 கோடி சம்பளமாக வாங்கி உள்ளாராம்.


 அவரது கெரியரிலேயே அவர் வாங்கும் அதிகபட்ச சம்பளம் இதுதான் என கூறப்படுகிறது. தற்போது இந்தியன் 2 படத்தில் பிசியாக நடித்து வரும் கமல்ஹாசன் அப்பட ஷூட்டிங் முடிந்ததும் புராஜெக்ட் கே படப்பிடிப்பில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படத்தை வருகிற 2024-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு கொண்டுவர உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement