விஷால் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் தான் 'லத்தி'. இத் திரைப்படமானது ஏற்கனவே ஒருமுறை ரிலீஸ் தேதி தள்ளிப்போன நிலையில் தான் பின்னர் வெளியானது. அத்தோடு வினோத் குமார் என்பவர் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
மேலும் விஷால் போலீஸாக நடித்து அசத்தியுள்ள இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அதுமட்டுமல்லாது விஷால் - யுவன் கூட்டணியில் உருவாகும் 15-ஆவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு விஷால் போலீஷாக நடித்து ஆக்ஷன் ஜானரில் உருவான இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் பெறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
அத்தோடு விஷாலும் தனக்கு இது ஒரு கம்பேக் படமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் லத்தி திரைப்படம் விஷாலின் எதிர்பார்ப்பு அனைத்தையும் பொய்யாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்தவகையில் விஷால் ஜோடியாக சுனைனா நடித்துள்ள இந்தப் படம் கடந்த 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழ்நாட்டில் 400 திரையரங்குகளிலும் மற்றும் ஆந்திரா, தெலங்கானாவில் 350 திரைகளில் இந்தப் படம் ரிலீஸானது.
இந்நிலையில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் லத்தி சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. இதன் காரணமாக நான்கு நாட்களை கடந்து பாக்ஸ் ஆபிஸில் ரூ. 7 கோடி வரை மட்டுமே விஷாலின் லத்தி திரைப்படம் வசூல் செய்துள்ளது.
Listen News!