ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்த கோமாளி படத்தை இயக்கியவர் தான் பிரதீப் ரங்கநாதன். மேலும் சமீபத்தில் வெளியான ‘லவ் டுடே’ படத்தில் ஹீரோவாக நடித்து இயக்கியுள்ளார்.
மேலும் இந்த படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் இப் படத்துக்கான தியேட்டர் காட்சிகளும் கூடுதலாகிக் கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் லவ் டுடே இயக்குனராக மட்டுமல்லாமல், ஹீரோவாகவும் இப் படம் மூலம் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக இவானா நடித்திருந்தார்.
மேலும் இப் படத்தில் ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப் படத்தின் திரைக்கதை ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை விறுவிறுப்பாக அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.
இந்நிலையில் தமிழில் ரூ. 80 கோடியை கடந்து வசூல் செய்துகொண்டிருக்கும் லவ் டுடே திரைப்படம் கடந்த வாரம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளிவந்தது.
இந்நிலையில், தெலுங்கில் விஜய்யின் பீஸ்ட் மற்றும் அஜித்தின் வலிமை இரு திரைப்படங்களும் செய்த வசூலை விட ரூ. 12 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனையை படைத்துள்ளது லவ் டுடே.
Listen News!