இயக்குநராக கலக்கி வந்த மிஷ்கின் சமீபகாலமாக படங்களில் நடிக்கவும் துவங்கி விட்டார். அந்த வகையில், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடித்து வருகிறாராம்.
அதிரடி ஆக்சன் கலந்த கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
தற்போது இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், படத்தில் நடிக்க இயக்குநர் மிஷ்கின் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் தற்போதுசமூகவலைத்தலங்களில் கசிந்துள்ளது. அதன்படி, அவருக்கு மொத்தமாக சம்பளம் கொடுக்கப்படாமல் ஒரு நாளைக்கு சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறதாம்.
கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 7 லட்சம் வரை அவருக்கு சம்பளம் கொடுக்கப்பட்டு வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
மேலும் இயக்குநர் மிஷ்கின் தற்போது பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
Listen News!