பட வாய்ப்பைத் தேடி அலைந்த ரஜினிகாந்திற்கு அபூர்வ ராகங்கள் திரைப்படம் அறிமுகப்படமாக அமைந்தது. முதல் படத்திலேயே பாலச்சந்தரின் மனதில் இடம் பிடித்த ரஜினி, அவரின் செல்லப்பிள்ளையாகவே மாறிவிட்டார். அதனைத் தொடர்ந்து மூன்று முடிச்சி, அவர்கள் அப்படித்தான், அலாவுதீனும் அற்புதவிளக்கும், பதினாறு வயதினிலே போன்ற படங்களில் வில்லான நடித்து பெயர் எடுத்தார்.
பாரதிராஜா இயக்கத்தில் 1977ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தில் ரஜினிகாந்தின் பரட்டை கதாபாத்திரம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. மரத்தடியில் துண்டுபீடியை வாய்வலிக்க இழுத்து விட்டு, ஊரில் உள்ள இளம் பெண்களை விரட்டி விரட்டி செட் அடிக்கும் ரோலில் சும்மா பக்காவாக பொருந்தி நடித்திருந்தார் ரஜினிகாந்த்.
இந்த படத்தில் நடித்த பிறகுதான் ரஜினிகாந்திக்கு வில்லனாக நடிக்க பட வாய்ப்புகள் தேடி வந்தன. இப்படத்தில் ரஜினிகாந்திற்கு வெறும் மூன்று ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டது. அப்போது, கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீ தேவி இருவரும் நட்சத்திர நடிகர்களாக டாப்பில் இருந்தனர்.அத்தோடு அந்த படத்தில் கமலுக்கு 27 ஆயிரம் ரூபாயும், ஸ்ரீ தேவிக்கு ஒன்பதாயிரம் ரூபாயும் சம்பளமாக வழக்கப்பட்டது.
ரஜினிகாந்தின் 47 ஆண்டுகால சினிமா பயணத்தில் பல மேடு பள்ளங்களை சந்தித்த ரஜினிகாந்த் இன்று தமிழ் திரையுலகில் ரூ 100 கோடிக்கும் மேல் சம்பளம் பெறும் நபராக இருக்கிறார். ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் மூன்றாவது இடத்தில் உள்ளார். பைரவி திரைப்படம் பெற்றுத்தந்த சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தை இன்று வரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படம் நடித்து வருகிறார். மேலும் இப்படம் இந்த ஆண்டு வெளியாக உள்ளது. தர்பார், அண்ணாத்த படங்கள் சொதப்பிய நிலையில், ஜெயிலர் மற்றும் லால் சலாம் படத்தை மாஸ் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறார். மேலும், ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் தலைவர் 170 படமும் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.
Listen News!