• Sep 21 2024

ராக்கெட்ரி படம் வெளியாகிய 5 நாட்களில் இந்தியாவில் மட்டும் வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஆர். ஜேவாக தனது திரைப் பயணத்தை ஆரம்பித்து மின்னலே என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் நடிகர் மாதவன். இதனைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் இவர் நடித்திருக்கின்றார். இது தவிர இயக்குநராகவும் களம் இறங்கியுள்ளார்.

அந்த வகையில் பிரபல ISRO ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றினை வைத்து ராக்கெட்ரி என்னும் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் வெற்று வருகின்றது.

ஆரம்பத்தில் படத்திற்கு பெரிய ரெஸ்பான்ஸ் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் போக போக பிரபலங்கள் பலரும் அந்த படத்தை பற்றி பாராட்டி சமூக வலைத்தளத்தில் பேச படத்திற்கு சற்று வரவேற்பு கிடைக்க தொடங்கி இருக்கிறது.

சூப்பர்ஸ்டார் ரஜினி உள்ளிட்ட பல பிரபலங்கள் ராக்கெட்ரி படத்தை பாராட்டி பேசி இருந்தனர். மேலும் மும்பையில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்துவரும் நிலையில் ராக்கெட்ரி படத்தில் வசூல் பாதிப்பை சந்தித்து இருக்கிறது.

5 நாட்களில் ராக்கெட்ரி படம் இந்தியாவில் 15 கோடி ருபாய் வசூலித்து இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவு வசூல் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement