திரையுலகில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னர் தொலைக்காட்சி தொகுப்பாளராக 'அசத்தப்போவது யாரு' என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதுமட்டுமன்றி 'மானாட மயிலாட' எனும் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்கேற்று தனது அற்புதமான நடனத்தின் மூலம் வெற்றி பெற்றிருந்தார்.
அதனைத் தொடர்ந்து 'நீதானா அவன்' என்ற தமிழ் திரைப்படம் ஒன்றில் நடித்திருந்தார். பின்னர் 'அட்டகத்தி' என்ற படம் இவருக்கு சிறந்த வாய்ப்பை கொடுக்க அமுதா என்ற கதாபாத்திரத்தின் மூலம் சினிமாவில் அமுதமாக அறிமுகமாகி இருந்தார். இந்த படத்திற்கு பின்னர் நடித்த 'காக்கா முட்டை' என்ற திரைப்படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதினையும் வென்றிருக்கின்றார்.
இவரின் சிறந்த நடிப்பின் வாயிலாக இவர் தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி எனப் பல மொழிகளிலும் பட வாய்ப்புக்களை பெற்று வருகின்றார். அதுமட்டுமன்றி இவ்வளவு காலமும் குடும்ப குத்து விளக்கு போன்று உடையணிந்து வந்த ஐஸ்வர்யா சமீபகாலமாக கவர்ச்சியை கொஞ்சம் தூக்கலாகக் காட்டக் கூடிய வகையில் உடையணிந்து வருகின்றார்.
இந்த நிலையில் இவர் ஹோம்லி கேர்ளாக நடித்த ஒரு படத்திற்காக இவர் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதாவது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு திரைப்படம் தான் 'நம்ம வீட்டு பிள்ளை'. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சூரி, சமுத்திரக்கனி, நட்டி, அனு இம்மானுவேல் என பல பிரபலங்களும் நடித்திருந்தார்கள்.
அத்தோடு இப்படத்தினை பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இப்படமானது மாபெரும் அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பையும், வசூலையும் பெற்று வெற்றியடைந்தது. இப்படம் தொடர்பாக சிவகார்த்திகேயன் ஒரு பேட்டியில் கூறும்போது தன்னுடைய திரை வாழ்க்கையில் முக்கிய படங்களில் இதுவும் ஒன்று எனத் தெரிவித்திருந்தார்.
நம்ம வீட்டு பிள்ளையில் சிவகார்த்திகேயனுக்கு நிகரான முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த வகையில் இப்படத்தில் நடித்தமைக்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சுமார் ரூ. 75 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!