• Sep 20 2024

எதிர் நீச்சல் சீரியலில் நடிக்கும் மாரிமுத்து வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?- ஒரு மாதத்திற்கு இவ்வளவா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில்ஆதிகுணசேகரனாக நடித்து வருபவர் நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து. இவர் இயக்குநராகவும் சினிமா நடிகராகவும் சோபிக்கவில்லை. திரைப்படங்களில் கூட சில குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில்தான் அவருக்கு ஜாக்பாட் அடித்தது போல் வந்தது எதிர்நீச்சல் சீரியல். 

அதில் தனது மனைவியையும் தனது தம்பி மனைவியையும் ஆணாதிக்கம் கொண்டு நடத்தும் காட்சிகள் கோபத்தை வரவழைத்தாலும் அவர் நடிப்பு அபாரம் என்பதை யாரும் மறுக்க முடியாது. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.


சீரியல்களில் நடிக்க முதல் இவர்  பரியேறும் பெருமாள், மருது, சுல்தான், கூட்டத்தில் ஒருவன், பைரவா போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கின்றார்.

33 வருட விடாமுயற்சிக்கு பின்னர் இப்போது சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் தனக்கென தனி அடையாளத்தை பதித்துs்ள இவர் அடிக்கடி பல சர்ச்சைகளிலும் சிக்கி வருவதுண்டு.


இந்த நிலையில் இவர் எதிர் நீச்சல் சீரியலில் நடிக்க அனைவரையும் விட அதிக சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஒரு மாதத்திற்கு மட்டும் இவர் ரூ. 75 லட்சம் சம்பளம் பெறுகிறாராம்.இந்த தகவல் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement