• Nov 15 2024

சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிளின் பெறுமதி எவ்வளவு தெரியுமா?- ஏலத்தில் வாங்க கூடிய ரசிகர் பட்டாளம்- முக்கிய பிரபலம் சொன்ன தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பெண்ணுக்குப் பெண்ணே பொறாமைப்படும் பேரழகு என்ற சொற்றொடர் கனகச்சிதமாக பொருந்துவது சில்க் ஸ்மிதா என்ற நடிகைக்கு தான்.தமிழ் திரை உலகில் சில ஆண்டுகளே நடித்திருந்தாலும் மறைந்து இரண்டரை தசாப்தங்களுக்கு பிறகும் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை ஆச்சரியங்களும் சுவாரஸ்யங்களும் நிரம்பியது.

ஆந்திர மாநிலத்தில் விஜயலட்சுமி ஆக பிறந்த சில்க் ஸ்மிதா நான்காம் வகுப்பு வரை மட்டுமே பள்ளி சென்றவர்.சிறுவயதிலேயே திருமணம் ஆகி மணமுறிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் சில்க் ஸ்மிதா நடிகையாக வேண்டும் என்ற கனவுகளுடன் சென்னைக்கு வந்தார்.


வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த காலகட்டத்தில் நடிகை சில்க் ஸ்மிதாவை ஏவிஎம் ஸ்டுடியோவிற்கு எதிரில் சந்தித்த இயக்குனர் வினுசக்கரவர்த்தி வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் சில்க் என்ற கதாபாத்திரத்தில் சாராய வியாபாரியாக நடிக்க விஜயலட்சுமிக்கு வாய்ப்பு வழங்கினார்.

தன்னுடைய திரை பெயரை ஸ்மிதா என மாற்றிக்கொண்ட விஜயலட்சுமி முதல் படத்தில் அவருக்கு புகழ் சேர்த்த சில்க் என்ற பெயரையும் உடன் சேர்த்துக்கொண்டார்.முதல் படத்திற்கு பின்னரே நடிகை சில்க் ஸ்மிதா விற்கு தமிழில் வாய்ப்புகள் குவிய தொடங்கின. கிறங்க வைக்கும் கண்களும், சொக்கி இழுக்கும் வனப்பும், திராவிட நிறமும் சில்க் ஸ்மிதாவை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றன.

சில்க் ஸ்மிதா உயிரிழந்து பல வருடங்கள் ஆகிவிட்டன.இருந்தாலும் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இப்பவும் உள்ளது.கடந்த வாரம் வெளியான மார்க் ஆண்டனி படத்தில் கூட சில்க் ஸ்மிதா போன்றே இருக்கும் ஒரு பெண்ணை பிடித்து நடிக்க வைத்தார்கள். 


அவர் ஸ்க்ரீனில் வரும் காட்சிக்கு அவ்வளவு ரெஸ்பான்ஸ் தியேட்டரில் இருந்தது. இந்நிலையில் சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிள் எவ்வளவுக்கு ஏலம் போனது என்பது குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது ஒரு படத்தின் ஷூட்டிங்கில் சில்க் ஸ்மிதா ஒரு ஆப்பிளை கடித்துவிட்டு தன் அருகில் வைத்திருக்கிறார். அதை கவனித்த ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த ஒருவர் அந்த ஆப்பிளை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டாராம். 

 அதனையடுத்து அவருக்கு ஒரு யோசனை தோன்றியிருக்கிறது. அதாவது அந்த ஆப்பிளை சில்க் கடித்த ஆப்பிள் என்று ஒரு இடத்தில் வைத்து ஏலம் விட்டிருக்கிறார். அந்த ஏலத்தில் சில்க் கடித்த ஆப்பிள் கிட்டத்தட்ட 200 ரூபாய்வரை சென்றதாம். இது அந்தக் காலத்தில் பரபரப்பான விஷயமாக பேசப்பட்டது. அந்த அளவுக்கு சில்க் மீதான மோகம் ரசிகர்களுக்கு இருந்தது என பிரபல பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்


Advertisement

Advertisement