கடந்த அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் லியோ. ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் லியோவின் ஃபீவர் கொஞ்சம் கூட குறையாமல் அந்த ஏரியாக்களில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை உருவாக்கி உள்ளதாகவும் 4 நாட்களில் இந்தியாவில் மட்டும் 179 கோடி வசூல் செய்து 200 கோடி வசூலை நோக்கி லியோ நகர்ந்து வருவதாக கூறுகின்றனர்.
இதில், தமிழ்நாட்டில் மட்டுமே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. லியோ படத்தின் விமர்சனங்களை கடந்து அதன் வசூல் குவிந்து வருவது நடிகர் விஜய்யின் நடிப்பை பார்க்கத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
3 நாட்களில் 305 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருந்த லியோ திரைப்படம் உலகம் முழுவதும் 4வது நாளில் அதிகபட்சமாக 90 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியுள்ளதாகவும் 390 முதல் 395 கோடி ரூபாய் வசூலை லியோ இதுவரை பெற்றிருப்பதால் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விடுமுறையுடன் சேர்த்து 500 கோடி வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் நாளில் அதிகாரப்பூர்வமாக வசூலை அறிவித்த தயாரிப்பு நிறுவனம் அதன் பின்னர் வசூல் கணக்கை இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!