• Sep 21 2024

லியோ திரைப்படம் ஒரு வாரத்தில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா? - அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்

stella / 10 months ago

Advertisement

Listen News!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் சுமார் 300 கோடி பட்ஜட்டில் உருவான லியோ அக்டோபர் 19-ஆம் தேதி, வெளியானது. விஜய் ரசிகர்களின், ஏகோபித்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது.

 இப்படம், வெளியானது முதலே கலவையான விமர்சனங்களையே பெற்றாலும், வெளியான முதல் நாளே ரூ.148 கோடி வசூலித்து ரசிகர்களை பிரமிக்க வைத்தது.அதுமட்டுமின்றி கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.


 குறிப்பாக கேரளாவில் அதிக வசூல் குவித்த தமிழ் படங்களின் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது லியோ. இப்படம் அம்மாநிலத்தில் மட்டும் ஆறு நாட்களில் ரூ.45 கோடி வசூலித்து உள்ளதாக கூறப்பட்டது. இதே நிலை நீடித்தால், ஜெயிலர் பட சாதனையை லியோ முறியடிக்கும் என ஆர்ப்பரித்த கூறி வருகிறார்கள் தளபதி ரசிகர்கள்.

இப்படம் வெளியாகி, 6 நாட்கள் ஆகும் நிலையில் பல திரையரங்குகள் வெறிச்சோடி காணப்படுவதாகவும், இப்படத்தின் வசூல் குறைந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இப்படியான நிலையில் படம் வெளியாகி ஒரு வாரத்தில் ரூ.461 கோடி வசூல் செய்து விட்டதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement