• Nov 14 2024

சிறந்த நடிகைக்கான தேசிய விருதினைப் பெற்ற ஆலியா பட்- கட்டியிருந்த சேலையின் பெறுமதி எவ்வளவு தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய திரைத்துறையில் அனைவருமே பெற விரும்பும் விருது தான் தேசிய விருது. இந்த விருதினைப் பெற வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு கலைஞர்களும் கடுமையாக உழைத்து வருகின்றனர்.இந்தச் சூழலில் 2021ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டன. விருது பட்டியலில் 2021ஆம் ஆண்டுக்கு முன்னர் தணிக்கை பெற்ற படங்கள் இடம்பெற்றிருந்தன.

அதன் படி இன்றைய தினம் இவ் விருது வழங்கும் விழாவானது டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்று வருகின்றது.இதனால் இந் நிகழ்வுக்கு நடிகை ஆலியா பட் தனது கணவர் ரன்வீர் கபூருடன் கலந்து கொண்டிருந்தார்.


இதை தொடர்ந்து, சற்று முன்னர், ஆலியா பட் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கைகளால், தேசிய விருதை பெற்றார்.இவர் கங்குவாய் என்ற படத்திற்காகவே இவ் விருதினைப் பெற்றிருந்தார்.


இந்த விருதினை பெற அலியா பட் , தன்னுடைய 50 லட்சம் மதிப்புள்ள திருமண சேலையை அணிந்து வந்து பெற்றார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆலியாவிற்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவிதது வருகின்றனர். அந்த வீடியே தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement