அஜித்தின் 62ஆவது படத்திற்கான அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் அவரின் தந்தை இறந்துள்ளமை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தந்தை காலமானதால் உச்சகட்ட சோகத்திற்கு ஆளானார் அஜித்.
இந்நிலையில் அஜித் தனது தந்தை பற்றி ஒரு வீடியோவில் கூறிய விடயமானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. அதாவது அவரின் வாழ்க்கையில் தைரியமாக பல முடிவுகளை எடுத்தாலும் அதற்கெல்லாம் பக்கபலமாக இருந்து அஜித்திற்கு துணையாக இருந்துள்ளார் அவரின் தந்தை.
அதுமட்டுமல்லாது சிறு வயதில் படிப்பில் நாட்டம் இல்லாமல் நடிப்பு, பைக் என அஜித் சென்றாலும் அதற்கும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அஜித்தின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அவரை வழிநடத்தினார் அஜித்தின் தந்தையான் சுப்ரமணி.
இவ்வாறாக அஜித்திற்கு ஓர் நல்ல தந்தையாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த நண்பராகவும் இருந்து அவரை வழிநடத்திய தந்தையின் பிரிவை அஜித் எவ்வாறு ஏற்றுக்கொள்வார். மேலும் அஜித் தன் குடும்பத்தை பற்றி அவ்வளவாக பேட்டிகளில் பேசியதில்லை என்றாலும், அவரின் "தந்தை தமிழ்நாட்டை சேர்ந்தவர்" தான் என்றும், "நானும் ஒரு தமிழன்" தான் என்றும் அஜித் ஒரு பேட்டியில் கூறியிருக்கின்றார்.
இந்த விடயமானது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தந்தையை இழந்து வாடும் அஜித்திற்கு என்ன நடந்தாலும் நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம் என கூறி அஜித் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!