• Sep 21 2024

மாதவனின் ஜே ஜே படத்தில் கதாநாயகியாக நடித்த பிரியங்கா இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களைக் கவர்ந்த நடிகைகள் பலர் இருக்கின்றனர்.அந்த வகையில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் ஜே ஜே.சரண் அவர்களின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான்  பிரியங்கா கோதாரி.

முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி வெளியான இப்படம் மூலம் பிரியங்காவிற்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவானது, ஆனால் அதன்பிறகு எந்த ஒரு படமும் அவர் நடிக்கவில்லை.


ஜீவா நடிப்பில் வெளியான கச்சேரி ஆரம்பம் திரைப்படத்தில் வாடா வாடா பையா என்னும் பாடலுக்கு நடனமாடி என்ட்ரி கொடுத்திருந்தார்.2016ம் ஆண்டு பாஸ்கர் பிரகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு அரசியலிலும் ஈடுபட்டு வந்தார்.


பல வருடங்களுக்கு பிறகு பிரியங்காவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் பிரியங்காவா இது இப்படி குண்டாகி ஆளே மாறிவிட்டார் என கமெண்ட் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 




Advertisement

Advertisement