• Sep 20 2024

சாய் பல்லவியா இது..? நடிப்பதற்கு முன்னர் எப்படி இருந்தார் தெரியுமா..? வைரலாகும் புகைப்படங்கள்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவர் 2015-ஆம் ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றிப் படமாக ஓடிய மலையாளத் திரைப்படமான 'பிரேமம்' என்ற திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இப்படமே இவருக்கு கதாநாயகி என்ற அந்தஸ்தையும் கொடுத்திருந்தது. சாதாரண ஒருவராக இருந்த சாய் பல்லவியை தென்னிந்திய அளவில் பிரபலமாக்கியதும் இந்தப் படம் தான்.



இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் 'தியா' என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார் சாய் பல்லவி. இப்படத்தில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தமையால் தொடர்ந்து சூர்யா, தனுஷ் எனப் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மேலும் சமீபத்தில் வெளிவந்த 'கார்கி' திரைப்படமும் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளதோடு வெற்றிப்படமாகவும் மாறி இருக்கின்றது. 



இவ்வாறாக பல படங்களிலும் வெற்றி வாகை சூடி வருகின்ற சாய் பல்லவி திரையுலகில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னர் பல நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். அதுமட்டுமன்றி இவர் சிறந்த ஒரு நடனக் கலைஞராகவும் விளங்கி இருக்கின்றார்.



இந்நிலையில் அப்படியான ஒரு நடன நிகழ்ச்சியில் சாய் பல்லவி பங்கேற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 


Advertisement

Advertisement