தமிழ் சினிமாவின் உடைய பிரபல இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் மிஷ்கின். இவர் பல வித்தியாசமான கதையம்சங்களைக் கொண்ட படங்களை இயக்கியதன் மூலமாக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர்.
இவர் சிறந்த இயக்குநர் மட்டுமல்லாது சிறந்த நடிகரும் கூட. அந்தவகையில் இவர் தற்போது தளபதி விஜய்யின் 67 படமான 'லியோ' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இயக்குநர் மிஷ்கினனின் திரையுலகப் பயணத்தில் மறக்க முடியாத படங்களில் ஒன்று 'பிசாசு'. இவரின் இயக்கத்தில் 2014 -ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு மக்கள் அந்தக் காலத்தில் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.
இந்தப் படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கின்றது. அதாவது இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க நடிகர் சூர்யாவின் தந்தையான சிவகுமாரை முதலில் கேட்டுள்ளார். ஆனால் ஒரு சில காரணத்தால் இப்படத்தில் நடிக்க சிவகுமார் மறுத்துவிட்டதாக பேட்டி ஒன்றில் மிஷ்கின் கூறியுள்ளார்.
அதாவது அதில் அவர் கூறுகையில் "நடிகர் சிவகுமாருக்கு எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லை. அதே போல தான் சூர்யா, கார்த்தி ஆகியோரை வளர்த்துள்ளார். அவர் நல்ல நடிகர் மட்டுமின்றி, அவர் சிறந்த தந்தையும் கூட" என்று சிவகுமாரின் வளர்ப்பை பற்றி புகழ்ந்து கூறியுள்ளார்.
மேலும் பிசாசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 பாகமும் உருவாகியுள்ளது. இதில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Listen News!