தமிழ் சினிமாவில் 90 காலக்கட்டத்தில் நடன கலைஞராக திகழ்ந்து பல படங்களில் பணியாற்றி ரசிகர்களிடத்தே பிரபலமானவர் நடிகை லேகா ஸ்ரீ. துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் நெருப்பு கூத்தடிக்குது பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பாடல் தற்போது வரை பேமசாக உள்ளது.
அதன்பின்னர் நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் காமெடி ரோலில் நடித்து அசத்தி இருந்தார். சமீபத்தில் நடிகை ஷகிலா எடுத்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பல ரகசியங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் காதலில் இருந்த நபர் யார் என்ற கேள்விக்கு என் கணவர் தான் என்று சிரிப்புடன் தெரிவித்தார்.
நானாக இருந்தேன் என்றால் காதலர் யாரென்று மறைக்காமல் கூறிவேன் என்று ஷகிலா பட்டென்று தெரிவித்தார். அதன்பின் காதல் கிசுகிசு பற்றி கேட்டதற்கு, நானும் வடிவேலு சாரும் காதலிப்பதாக பலர் என்னிடம் செய்தியை பார்த்ததாக சொன்னார்கள் என்று லேகா ஸ்ரீ கூறியுள்ளார்.
அத்தோடு வடிவேலு சார் எனக்கு நண்பர். நான் அவருடன் நிறைய படங்கள் நடித்ததால் தான் அப்பிடி கிசுகிசுக்கப்பட்டது.ஒரு படத்தில் நடித்த போது என் அண்ணன் இறந்த விசயம் வடிவேலு சாருக்குத்தான் தெரிய வந்தது. ஆனால் நான் ஷூட்டிங்கில் இருந்தேன்.
என்னிடம் அதை எப்படி கூறுவது என்று 2 மணி நேரம் தயங்கி அதன்பின் கூறி வழி அனுப்பி வைத்தார் வடிவேலு என்று தெரிவித்துள்ளார் லேகா ஸ்ரீ.
Listen News!