நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் தான் நானே வருவேன்.இப்படம் 29ம் திகதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
சைக்கோ க்ரைம் திரில்லர் பின்னணியில் உருவாகியுள்ளதாக சொல்லப்படும் இப்படத்தினை இயக்குநர் செல்வராகவன் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசரும் அண்மையில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.
அத்தோடு இப்படம் வெளியாகும் அடுத்த நாளே பொன்னியின் செல்வன் திரைப்படமும் வெளியாக இருக்கிறது. இதனால் நானே வருவேன் படத்திற்கு முன்பதிவில் வரவேற்பு கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது.
இதற்கிடையே தனுஷ் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் முதல் ரிவ்யூ குறித்த புகைப்படம் பரவி வருகிறது. அதில் நானே வருவேன் திரைப்படம் இந்தாண்டின் சிறந்த தில்லர் படத்தில் ஒன்று, தனுஷ் சிறப்பாக நடித்திருக்கிறார், விருது நிச்சயம் என ஸ்டார்ஸ் உடன் ரிவ்யூ ஒருவர் போட்டுள்ளார்.
ஏற்கனவே இதே நபர் பல சுமாரான திரைப்படங்களுக்கு இதே போல் புகழ்ந்து ரிவ்யூ கொடுத்திருக்கிறார்.அத்தோடு இப் படம் வெளியாகும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!