தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். மூன்று கதாநாயகிகள் நடித்திருந்த இப்படம் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றதோடு இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் எனலாம்.
குறிப்பாக படத்தில் இடம் பெற்ற ‘மேகம் கருக்காதா’ பாடல் பெரிய ஹிட்டானது. படத்தில் இந்தப் பாடலின் நடன அமைப்பும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. ட்விட்டர், இன்ஸ்டா என இந்தப் பாடலின் கவர் வெர்ஷனுக்கு ரசிகர்கள் பலரும் நடனமாடி வீடியோ பகிரும் அளவிற்கு ரீச் ஆனது.
தற்போது இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்த மேக்கிங் வீடியோவை டான்ஸ் மாஸ்டர் ஜானி டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார். தனுஷுக்கு அவர் நடன அசைவுகளை சொல்லித் தரும் இந்த வீடியோ இப்போது டுவிட்டரில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது
மேலும் இது தவிர தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள நானே வருஆவன் திரைப்படமும் செப்டெம்பர் மாதம் 29ம் திகதி வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Immensely cherished choreographing @dhanushkraja Sir #RaashiKhanna ma'am & @MenenNithya garu for #MeghamKarukatha 😍
Thank you for the phenomenal response to the song & #Thiruchitrambalam ❤
Here's how it went behind the screens 🤩 pic.twitter.com/FtXlsa3jgk
Listen News!