• Nov 14 2024

22ஆண்டுகளின் பின் அஜித்துடன் இணையும் ஜஸ்வர்யாராய்-எந்த படத்தில் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சினிமா, பைக் ரைட், துப்பாக்கிச் சுடுதல் என அனைத்தையும் ஒன்றாக பேலன்ஸ் செய்து, அனைத்திலும் டாப்பாக இருந்து வருபகிறார் நடிகர் அஜித். தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார்.

ஏகே 61 படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங்கிற்காக அஜித் தயாராகி வருகிறார். மேலும் சஞ்சய் தத், மஞ்சுவாரியர் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தின் ஷுட்டிங் செப்டம்பர் மாத இறுதியில் முடிவடைய உள்ளதாக கூறப்படுகிறது.

அதே சமயம் அஜித் அடுத்ததாக நடிக்க உள்ள ஏகே 62 படத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளை டைரக்டர் விக்னேஷ் சிவன் ஏற்கனவே துவங்கி செய்து வருகிறார். இந்நிலையில் ஏகே 62 படம் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

ஏகே 62 டீமுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறும் தகவலின் படி, விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டு வந்தது.எனினும் இதற்காக நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி, ஏகே 62 படத்திற்கான ஃபர்ஸ்ட் சாய்ஸ் நயன்தாரா கிடையாது.அத்தோடு ஐஸ்வர்யா ராய் தான் என சொல்லப்படுகிறது. இதற்காக கடந்த வாரமே ஐஸ்வர்யா ராயிடம் முதல் கட்ட பேச்சை விக்னேஷ் சிவன் துவக்கி விட்டதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை அவர் ஓகே சொல்லி விட்டால், 23 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பார்.


மேலும் இவர்கள் இருவரும் ஏற்கனவே 2000 ம் ஆண்டில் டைரக்டர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ரிலீசான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்துள்ளனர். ஆனால் அந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக தபுவும், ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக மம்முட்டியும் நடித்திருந்தனர்.இதனால் இவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து நடிப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


ஏகே 61 படத்தின் ஷுட்டிங் செப்டம்பரில் முடிவடையும் என கூறப்படுவதால், ஏகே 62 படத்தின் ஷுட்டிங் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்தில் துவங்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இது கிராமத்து சப்ஜெக்ட் என்றும், மதுரையை மையமாகக் கொண்ட கதை என்றும் சொல்லப்படுகிறது.



Advertisement

Advertisement