தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா என்னும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் நெல்சன் திலீப் குமார். இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் விஜய்யை வைத்து பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை இயக்கி இருந்தார்.
இப்படத்தை அடுத்து ரஜினியை வைத்து ஜெயிலர் என்னும் படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைப்பதோடு இப்படத்தின் படப்பிடிப்பானது ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அதையடுத்து ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது தமன்னாவின் கேரக்டர் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் அவர் ரஜினிக்கு ஜோடிதான் என்றாலும் முழு நீள வேடமாக இல்லாமல், சில காட்சிகளில் மட்டுமே நடிக்கும் ஒரு சிறிய வேடத்தில்தான் தமன்னா நடிக்கிறாராம். அதாவது பேட்டை படத்தில் எப்படி திரிஷாவுக்கு சிறிய வேடமோ அதே போன்றுதான் இந்த படத்தில் தமன்னாவுக்கும் சிறிய வேடம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
Listen News!