இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான சோழர்களின் பொற்கால வரலாற்று புனைவு படமான பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவாகின.
கடந்த ஆண்டு வெளியான முதல் பாகம் உலகளவில் 500 கோடி வசூல் ஈட்டிய நிலையில், இரண்டாம் பாகம் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி உள்ளது.
சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சோபிதா துலிபாலா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, ரகுமான் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
பொன்னியின் செல்வன் 2 படத்தில் இளம் வயது நந்தினி அறிமுகமாகும் பாடலான ஆழி மலைக்கண்ணா பாடல் லிரிக் வீடியோவை லைகா நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது.அத்தோடு ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டாக மாறி உள்ளது.
அத்தோடு இளங்கோ கிருஷ்ணன் வரிகளில் இடம்பெற்ற பொன்னியின் செல்வன் பட பாடல்கள் இதுவரை இல்லாத அளவுக்கு மற்ற படங்களின் ஆடியோ உரிமத்தை விட அதிகபட்சமாக 22 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாக கூறுகின்றனர்.
முதல் பாகம் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த நிலையில், இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொன்னியின் செல்வன் 2 படத்தின் கிளைமேக்ஸில் இயக்குநர் மணிரத்னம் நாவலில் இருந்து சில இடங்களில் மாறுபட்டு தனியாக ஒரு புனைவுக் கதையை உருவாக்கிய நிலையில், படத்தின் வசூலுக்கு பலத்த அடி விழுந்துள்ளது.
அத்தோடு பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் ஆகி 13 நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை இந்தியாவில் 170 கோடி ரூபாய் வசூலும் உலகளவில் 320 கோடி வசூலும் இந்த படம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 300 கோடி ரூபாய் வசூல் வரை அதிகாரப்பூர்வமாகவே லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் 500 கோடி வசூல் வந்த நிலையில், இரண்டாம் பாகம் 1000 கோடி வரை வரும் என அந்த படத்தில் நடித்த பார்த்திபன் உள்ளிட்ட பலர் தெரிவித்தனர். ஆனால், தற்போது 400 கோடியை நெருங்குமா என்பதே சந்தேகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அத்தோடு கடந்த வாரம் பெரிய படங்கள் ரிலீஸ் ஆகாத நிலையில், பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் 300 கோடி வசூலை எட்டியதாகவும் இந்த வாரம் கஸ்டடி உள்ளிட்ட பல படங்கள் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், மேலும் தியேட்டர்கள் குறைந்து வசூல் முற்றிலும் குறையும் என தெரிகிறது. அதிகபட்சமாக 350 கோடி வசூலை ஒட்டுமொத்தமாக பொன்னியின் செல்வன் 2 அள்ளும் என கணிக்கப்படுகிறது.
இயக்குநர் மணிரத்னம் லைகா தயாரிப்பில் 2 பாகங்களையுமே சேர்த்து வெறும் 250 கோடி பட்ஜெட்டில் எடுத்து விட்டு இத்தனை பெரிய லாபத்தை பார்த்திருப்பதே பெரிய வெற்றி தான் என்கின்றனர். ஆனால், 2ம் பாகம் முதல் பாகத்தை விட பெரிதாக வசூல் ஈட்டாதது பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
Listen News!