• Nov 17 2024

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடிகர் போண்டாமனியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இலங்கைத் தமிழன் என்ற அடையாளத்தோடு காமெடி நடிகராக வலம் வருபவர் தான் போண்டாமணி. இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் வடிவேலுவுடன் சேர்ந்து நடித்து அசத்தியவர்.

இவர் சமீபத்தில், இதயக் கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தி வெளியாகியதால் ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என கருத்துகளைப் பகிர்ந்து வந்தனர்.

இதையடுத்து இப்போது அவர் சிகிச்சையில் தேறி நலமுடன் உள்ளதாக நல்ல செய்தி வெளியாகியுள்ளது. மேலும் அவர் விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement