• Sep 20 2024

முதன் முறையாக பிரபல நடிகையுடன் இணையும் விஜய்-யாருடைய இயக்கத்தில் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத உச்சத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் அள்ளிக் கொடுத்தது.

தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். தளபதி விஜயின் பிறந்ததினத்தை முன்னிட்டு இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மற்றும் பிறந்தநாள் அன்று 2nd லுக் வெளியாகி தெறிக்க விட்டது.இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்து வருகின்றார்.

மேலும் சரத்குமார், சத்யராஜ், குஷ்பூ, பிரகாஷ்ராஜ் போன்ற முன்னணி பிரபலங்களும் நடித்து வருகின்றனர். இப்படத்தை தில் ராஜா தயாரிக்கிறார். இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விஜயின் பிறந்தநாள் அன்று தளபதி 67 குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என விஜய் ரசிகர்கள் ஆவலோடு இருந்தார்கள் ஆனால் இப்படம் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் நடிகர் விஜய், அட்லீ யாத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் ஜவாண்ட் படத்தில் காமியோ கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக சில நாட்களுக்கு முன் வதந்திகள் வெளிவந்தன.

இதன்பின் சில நாட்களாக இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் காமியோ கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வரும் நிலையில், தீபிகா படுகோன் நடிக்கிறாரா? என்று கேட்டு வந்தனர் இந்நிலையில் தற்போது விஜய் மற்றும் தீபிகா இருவரும் இப்படத்தில் காமியோவாக வரவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் நடக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement