• Nov 10 2024

அப்பாவி பெண்ணாக சமந்தா நடித்த சகுந்தலம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?- இவ்வளவு தானா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

சமந்தா நடிப்பில் நேற்று திரையரங்கில் வெளியான சாகுந்தலம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.மேனகா, விஸ்வாமித்ரரின் காதலின் சாட்சியாக பிறக்கிறார் சகுந்தலா. தன் தவத்தைக் கலைக்கை இந்திரனால் மேனகை வந்தால் என்பதை தெரிந்து கொண்ட விஸ்வாமித்திரர் மேனகையை விட்டுச் சென்றுவிடுகிறார்.

 இதனால், தங்களுக்குப் பிறந்த குழந்தையை கன்வ முனிவரின் ஆசிரமம் அருகே விட்டுச் செல்கிறார் மேனகா. அந்த குழந்தைக்கு சகுந்தலா என பெயர் வைத்து சொந்த மகள் போல வளர்த்து வருகிறார் கன்வ முனிவர்.அழகின் மொத்த உருவாக இருக்கும் சகுந்தலாவின் வாழ்க்கையில் புயல் சீறுகிறது. கன்வ முனிவரின் ஆசிரமத்துக்கு எதிர்பாராதவிதமாக வருகிறார் ஹஸ்தினாபுர அரசர் துஷ்யந்தன்.


 அவரின் பார்வை சமந்தா மீது விழ இருவரும் காதலிக்கிறார்கள். அவரை காந்தர்வ திருமணம் செய்துகொண்டு, அவரது குழந்தைக்குத் தாயாகிறார். ஆனால், முனிவரின் சாபத்தால், துஷ்யந்தன், சகுந்தலையின் காதலை மறந்துவிடுகிறான். புனிதமான அவளின் காதலால் அவள் அனுபவித்த துயரங்களையும், மாய சக்தியால் காதலை மறந்த காதலனை நினைத்து உருகுகிறாள் சகுந்தலா.

புராணக்கதை என்பதால் அடுத்து என்ன ஆகும் என்று தெரிந்து இருந்தாலும், கதைக்கு இன்னும் அழகு சேர்த்து இருக்கலாம், படத்தில் வரும் காட்டு விலங்குகளின் கிராஃபிக்ஸ் காட்சிகள் எரிச்சலூட்டும் வகையில் இருந்தன. கிராபிக்ஸ் காட்சிக்காகத்தான் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படம் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது கூட ரிலீஸ் கிராஃபிக்ஸ் காட்சிகள் எடுபடவில்லை.


சகுந்தலம் படத்தின் ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் அது சமந்தா தான் அழகு நிறைந்த அப்பாவி பெண் கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்து இருக்கிறாள். படத்தின் இரண்டாம் பாதியில் அரசவையில் அவர் பேசும் வசனம் ரசிக்கும்படி இருக்கிறது. மற்றபடி அனைத்து கதாபாத்திரங்களின் நடிப்பும் மனதில் நிற்கவில்லை. சமந்தாவிற்காக வேண்டுமானால் இந்த படத்தை பார்க்கலாம்.


தமிழ்,தெலுங்கு, மலையாளம்,இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியான சகுந்தலம் படம் உலகம் முழுவதும் ஐந்து கோடியை வசூலித்துள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை என்பதால், சமந்தாவின் விஸ்வாசிகளால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement