• Sep 20 2024

ஜெயிலர் படத்தில் கெத்து காட்டிய கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் ஜெயிலர். ரஜினி நடிப்பில் வெளியாகிய இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், தமன்னா,சிவராஜ்குமார் என ஏராளமான நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்திருந்தனர்.

சன் பிச்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 150 கோடிக்கு மேல் வசூலித்தாகவும்  உலகம் முழுவதும் ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்தாக கூறப்படுகின்றது.


இந்தப்படத்தில் மாஸ் ரோலில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் நடித்திருந்தார். சின்ன கதாபாத்திரம் என்றாலும் ரஜினிக்காக நடித்து கொடுத்துள்ளார்.கன்னடத்தில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் இவர்  இவரது தந்தை ராஜ்குமாரும் முன்னணி நடிகராக இருந்துள்ளார்.


தற்போது சிவராஜ்குமாரின் சொத்து மதிப்பு குறித்த விபரம் வெளியாகியுள்ளது. இதாவது இவரது சொத்து மதிப்பு ரூ. 210 கோடிக்கு மேல் இருக்கின்றதாம். அத்தோடு ஒவ்வொரு படத்துக்கும் ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்குகின்றார் என்றும் கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement