• Sep 20 2024

மேதகு இயக்குநர் தி கிட்டுவின் அடுத்த படம் எது தெரியுமா..? வெளியானது புதிய அப்டேட்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த ஆண்டு இயக்குநர் தி கிட்டுவின் இயக்கத்தில் இலங்கையில் நடந்த சம்பவம் குறித்து வெளியான திரைப்படம் தான் ‘மேதகு’.

மேலும் இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உலகலாவியரீதியில் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றது.அதுமட்டுமில்லாமல் அந்த படத்தின் இயக்குநர் தி கிட்டுவுக்கும் பாராட்டுகள் குவிந்து வண்ணம் இருந்தது.

இதையடுத்து அவர் சல்லியர்கள் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த திரைப்படமும் இலங்கை அரசியல் களத்தைக் கொண்டதாகவே உருவாகியுள்ளது.

நடிகர் கருணாஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். அத்தோடு அவர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெரும்பாலும் புதுமுகங்களே இந்தப் படத்தில் நடித்துள்ளனர் என கூறப்படுகின்றது.

அத்தோடு கவிஞர் வைரமுத்து சல்லியர்கள் படத்துக்கு பாடல்களை எழுதி உள்ளார்.

இதையடுத்து இப்போது இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டு டிரைலர் விரைவில் வெளியாகுமென படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேதகு படத்தின் வெற்றியால் இந்தபடத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement