• Sep 21 2024

லிங்குசாமி இயக்கத்தில் வெளியான தி வாரியர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர்களில் ஒருவர் தான் லிங்குசாமி. இவரது இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன.

அந்த வகையில் இவரது இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு இறுதியாக வெளியாகிய திரைப்படம் தான் சண்டக்கோழி 2. இப்படத்தினைத் தொடர்ந்து 4 வருடங்களுக்குப் பிறகு இவர் இயக்கி வரும் திரைப்படம் ‘தி வாரியர்’.

பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி மற்றும் கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவான திரைப்படம் ’தி வாரியர்.இப்படம் நேற்று வெளியானதில் இருந்து அதிகமாக கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்நிலையில் தற்போது தி வாரியர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

ஆம், அதன்படி இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ,12.20 கோடியை வசூல் செய்திருக்கின்றது, மேலும் ரூ. 8.02 கோடியை ஷேர் எடுத்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement