• Sep 20 2024

நயன்தாராவுக்கு நடிகர் ஆர்யா வைத்த செல்லப் பெயர் என்ன தெரியுமா?- அட இது வரை தெரியாமல் போச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடும் வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. ஆரம்பத்தில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பின்பு காதல் சர்ச்சைகளில் சிக்கியதால் சில காலம் திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்ததோடு படவாய்ப்பின்றியும் இருந்தார்.

இருப்பினும் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தான் மீண்டும் ரி என் ரி கொடுத்தார். இந்தப்படம் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு பிரபல சேனலில் ராஜா ராணி படக்குழுவினர் பேட்டி ஒன்று அளித்துள்ளனர்.

அந்த பேட்டியில் இருந்த நயன்தாராவிடம் ஆர்யாவிடமும் பல வினாக்கள் கேட்கப்பட்டது. அதற்கு இருவரும் சுவாரஸியமான பதில்களைத் தெரிவித்து வந்தனர். அதில் ஆர்யா என்றால் என்ன என்று நயன்தாராவிடம் கேட்ட போது நயன்தாரா ஆர்யா என்றால் பஃன் என்று கூறினார்.

அதே போல ஆர்யாவிடம் நயன்தாராவின் போஃன் நம்பரை எப்படி பதிவு செய்து வைத்திருக்கின்றீர்கள் என்று கேட்ட போது தினேஷா என்று பதிவு செய்துள்ளதாக கூறியிருக்கிறார். அதற்கான காரணம் என்ன என்று கேட்ட போது கேரளாவில் இப்படியான முறையில் தான் கூப்பிடுவாங்க அதனால தான் இப்படிக் கூப்பிடுகின்றேன் என காமெடியாக பதில் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

.

Advertisement

Advertisement