• Sep 20 2024

நடிகை பூஜா ஹெக்டே கட்டியிருக்கும் மெட்டாலிக் லினன் சாறியின் விலை என்ன தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் ஜுவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் பூஜா ஹெக்கே. இப்படத்தினைத் தொடர்ந்து தமிழில் சரியான வாய்ப்புக் கிடைக்காததால் தெலுங்கு சினிமாவில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்.

இதனால் தெலுங்கு சினிமாவில் இவருக்கு படவாய்ப்புகள் குவிந்ததோடு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார். இவ்வாறு மிகவும் பிஸியா நடிகையாக வலம் வரும் இவர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார்.

இந்த படம் மோசமான விமர்சனங்களை பெற்றாலும் பூஜாவின் டான்ஸ் அதிகம் வரவேற்பை பெற்றது. தற்போது இன்ஸ்டாகிராமில் அவரது டான்ஸ் போல ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிடுபவர்கள் தான் அதிகமா இருக்கின்றனர்.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கிளாமர் உடையில் கலந்துகொண்டிருந்த ஸ்டில்கள் வைரல் ஆனது. அதே போல லெஜண்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவர் தங்க நிற ஜொலிக்கும் சேலையில் வந்திருந்தார்.

இந்த மெட்டாலிக் லினன் சாரி பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில் அதன் விலை பற்றிய விவரம் வெளியாகி உள்ளது. அந்த சேலையின் விலை சுமார் 40 ஆயிரம் ருபாயாம். இந்த விலை ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement