வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வாரிசு. இப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. ஏற்கனவே, இப்படத்தின் பாடல்கள் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்தன.
நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகை விஜய் பச்சை கலரில் எளிமையாக வந்திருந்தார்.
பார்க்கத்தான் இந்த சட்டை எளிமை. விலையைக் கேட்டால் தலையைச் சுற்றுகிறது. இந்த சட்டை HTK ப்ராண்டை சேர்ந்தது என்றும், சட்டையின் விலை 197 டாலர் என்றும் கூறப்படுகிறது. இந்திய மதிப்பின் படி இந்த சட்டையின் விலை மதிப்பு சுமார் 15 ஆயிரம் ஆகும். இதனை கேட்ட ரசிகர்கள் சட்டையை இணையத்தில் தேடி வருகின்றனர்.
இந்தப் படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம், ஜெயசுதா, குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, பிரபு, ஆனந்தராஜ், கணேஷ் வெங்கட்ராமன், விடிவி கணேஷ், சம்யுக்தா, ஸ்ரீமன் ஆகியோர் பலரும் நடித்துள்ளனர். தமன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!