• Sep 20 2024

மறைந்த நடிகர் மாரிமுத்துவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?- வெளியாகிய தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் மாரிமுத்து இயக்குநர், நடிகர், சீரியல் நடிகர் என பல்வேறு தளங்களில் தொடர்ந்து தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வந்தவர். கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்கள் இவரது இயக்கத்தில் வெளியானது. உதவி இயக்குநராக மணிரத்னம், ராஜ்கிரண், எஸ்ஜே சூர்யா, வசந்த் உள்ளிட்டவர்களுடன் பணியாற்றியுள்ள மாரிமுத்து, நடிகராகவும் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

சமீபத்தில் இவரது நடிப்பில் ரஜினியின் ஜெயிலர் படம் வெளியானது. இந்தப் படத்தில் வில்லன் கோஷ்டியில் இருந்தாலும் ரஜினியுடன் அதிகமான காம்பினேஷன் காட்சிகள் மாரிமுத்துவிற்கு இருந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் நடித்துவந்தார். கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் இவர் நடித்துள்ளார். 


இந்தப் படம் அடுத்த ஆண்டு ரிலீசுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படங்கள் கொடுத்த பிரபலத்தைவிட அதிகமான புகழை, சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரின்மூலம் பெற்றுவந்தார் மாரிமுத்து.வில்லன் கேரக்டரையும் சிறப்பான நடிப்பால், ஆளுமையால் சிறப்பாக்க முடியும் ரசிகர்களை கொண்டாட வைக்க முடியும் என்பதற்கு மாரிமுத்துவும் முக்கியமான எடுத்துக்காட்டாக விளங்கினார்.

இப்படியான நிலையில் நேற்றைய தினம் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார்.இவரது இறப்பு ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்தாலும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


மாரிமுத்துவின் ஆரம்ப கால கஷ்டத்தை அறிந்து அவரின் மகன் படிப்பு செலவுக்கு உதவியது கூட அஜித் தான் என்பதை மாரிமுத்து, பேட்டி ஒன்றியிலும் தெரிவித்துள்ளார்.எதிர்நீச்சல் சீரியலில் முதலில் ரூ. 20 ஆயிரம் சம்பளம் வாங்கி வந்தவர் இப்போது ரூ. 40 முதல் ரூ. 50 ஆயிரம் வரை 1 நாளைக்கு சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.

இவர் தனது கனவு இல்லத்தை இரண்டு கோடி செலவு செய்து வாங்கியுள்ளார், ஒரு கார் ஒன்றை வைத்துள்ளார். இதை தவிர சில லட்சம் மட்டுமே இவரின் பேங்க பேலன்சில் உள்ளதாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.  

Advertisement

Advertisement