தமிழ் சினிமாவில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்து சாதனை படைத்த முக்கியமான திரைப்படங்களில் ஒன்று 'விக்ரம்'. இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்ததோடு அப்படத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் கதாநாயகனாகவும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்திருந்தார்கள்.
மேலும் இப்படமானது கடந்த ஜூன் 3-ஆம் திகதி வெளியாகிய நிலையில் அமோக வரவேற்பினையும் வசூலையும் பெற்றுக் குவித்திருந்தது. இப்படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரித்திருந்தது. அத்தோடு ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டிருந்தது.
இப்படத்தில் கமல் மற்றும் விஜய் சேதுபதியோடு இணைந்து பகத் பாசில், சூர்யா எனப் பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருந்தார்கள். அந்த வகையில் ரசிகர்களின் முழு எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்த இந்த 'விக்ரம்' திரைப்படம் வசூலில் ரூ. 420 கோடியை தாண்டி சாதனை படைத்திருக்கின்றது.
இப்படமானது வெளியாகிய நாளிலிருந்து சுமார் 50 நாட்களை கடந்து திரையரங்கில் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் "இப்படத்தின் வெற்றிக்கு என்ன காரணம்" என்று கமல் ஹாசனிடம் அண்மையில் நடந்த நிகழ்வு ஒன்றில் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு கமல் அளித்த பதிலானது தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. அதாவது அவர் கூறுகையில் "இந்த வெற்றிக்கு ஆடியன்ஸ் தான் காரணம். அவர்களுக்கு தெரியும் எந்த படத்தை வெற்றிபெற செய்வேண்டும் என்று. பெரிய நட்சத்திரங்கள் நடித்த பல திரைப்படங்கள் படுதோல்வியடைந்துள்ளது. அதையும் அவர்கள் செய்வார்கள். அவர்களை ஈர்க்க வகையில் படம் இருக்க வேண்டும் " என்று கூறியுள்ளார்.
கமல் ஹாசன் அளித்த இந்தப் பதிலைக் கேட்ட ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்களுடைய வெற்றியை தீர்மானிப்பது ஒவ்வொரு ரசிகனும் தான் என்பதை புரிந்து வைத்திருக்காரு நம்ம கமல் ஹாசன்.
பிற செய்திகள்
- அழகிற்கு வயதேது ..? கொள்ளை அழகில் ரசிகர்களை கொள்ளை கொள்ளும் கஜோல்… வைரலாகும் புகைப்படங்கள்..!
- விவகாரத்தான முன்னாள் மனைவிகளை சந்தித்து வரும் பிரபல நடிகர்…அவரின் பதிலைக் கேட்டு ஆச்சரியமடைந்த ரசிகர்கள்..!
- கடலுக்கடியில் ‘தல’ ரசிகர்கள் செய்த வித்தியாசமான முயற்சி… எதற்காகத் தெரியுமா..? வைரலாகும் வீடியோ பதிவு..!
- டிடிக்கு இப்படி ஒரு சகோதரர் இருக்காரா..? பார்ப்பதற்கு ஹீரோ போல இருக்காரே…வெளியான புகைப்படம்..!
- ஆண் வேடத்தில் அட்டகாசம் செய்யும் ஜெனிலியா…படம் பிடித்த கணவர்…வைரலாகும் வீடியோ பதிவு..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!