தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் மகேஷ்பாபு. இவர் நீடா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார்.இதனை அடுத்து கதாநாயகனாக மாறி நடிக்க ஆரம்பித்தார். தற்பொழுது வரை தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகின்றார்.
இவரை தெலுங்கு ரசிகர்கள் பிரின்ஸ் என்று தான் அழைத்து வருவதுண்டு.மேலும் இந்திய அளவிலும் ஃபேமஸ்டான நடிகராக தற்போது இருக்கிறார். மகேஷ் பாபு நடித்த படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக்காகியுள்ளன. ஏன் விஜய் மகேஷ் பாபுவின் படங்களால்தான் தப்பிக்கிறார். அவரது படங்களை ரீமேக் செய்துதான் மெகா ஹிட்டுகளை கொடுக்கிறார் என்ற பேச்சு ஓடுவதுண்டு.
ஆனால் மகேஷ் பாபுவோ இதுவரை ஒரு ரீமேக் படத்தில்கூட நடித்ததில்லை என்பது தான் முக்கியமாகும்.எதற்காக ரீமேக் படத்தில் நடித்ததில்லை என்பது குறித்து ஒரு பேட்டியில் பேசிய அவர், "நீங்கள் ஏன் ரீமேக் படங்களை செய்யக்கூடாது என பலர் என்னிடம் கேட்கிறார்கள். ஏற்கனவே ஒரு படத்தைப் பார்த்துவிட்டு செட்டுக்கு சென்றால் அதில் என்ன புதிய விஷயம் இருக்கப்போகிறது.
அந்த ஹீரோ செய்ததையா மீண்டும் நான் செய்ய வேண்டும். முதலில் அதை நீங்கள் செய்வீர்களா?.. எப்படி அதை செய்வது. அதனால்தான் அதனை நான் தவிர்க்கிறேன். நான் ரீமேக்குக்கு எதிரானவன் என பல முறை சொல்லியிருக்கிறேன்.
ரீமேக் படங்களோடு ஒப்பிடுவது சகஜம்தான்.அதில் எவ்வளவு நடித்தாலும் சில சமயங்களில் ஒரிஜினல் வெர்ஷனில் நடித்த ஹீரோவை இமிட்டேட்ட் செய்கிறார் என்ற கருத்து எழும். எதற்காக இதுபோன்ற விஷயங்களில் ரிஸ்ட்க் எடுக்க வேண்டும் என்றுதான் ரீமேக்கிலிருந்து ஒதுங்கியே இருக்கிறேன்" என்றார்.அத்தோடு இவர் இன்று தனது 48வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!