• Sep 20 2024

அஜித்தின் 'விடாமுயற்சி' ஷூட்டிங் லேட்டாக என்ன காரணம் தெரியுமா? வெளியான லேட்டஸ் அப்டேட்.!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் . இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் துணிவு. இந்த படத்தை தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள விடாமுயற்சி படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

படத்தின் அறிவிப்பு வெளியாகி சில மாதங்கள் ஆகியும் இன்னும் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்து வருவதால் ரசிகர்கள் இந்த படத்தின் நிலை என்ன என தெரியாமல் தவித்து வருகின்றனர். அஜித் பைக் உலக சுற்றுலா சென்று விட்டார்.

இப்படியான நிலையில் படம் தள்ளி போவதற்கான காரணம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை வலுவாக மேம்படுத்தி களமிறங்குவதற்காகவே மகிழ் திருமேனி கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்வதாக தெரியவந்துள்ளது.

விரைவில் படப்பிடிப்புகள் தொடங்கும் எனவும் தெரிய வர அஜித், மகிழ் திருமேனி கூட்டணியில் வெளியாகும் திரைப்படம் தரமான சம்பவமாக இருக்கும் என ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Advertisement

Advertisement