பாலிவுட் சினிமாவின் பிரபல நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் அமீர் கான். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'லால் சிங் சத்தா'. இப்படம் ஆனது வெளியாகி விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
மேலும் ஹாலிவுட்டில் 1994-ஆம் ஆண்டு வெளியான 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump) என்ற திரைப்படத்தை தழுவியே பாலிவுட்டில் 'லால் சிங் சத்தா' என்ற திரைப்படம் உருவாகியது. இதில் இந்தி நடிகர் அமீர்கான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படத்தில் அமீர் கானுடன் இணைந்து கரீனா கபூர், நாக சைத்தன்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.
அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஆனது ஆகஸ்ட் 11-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது. இப்படமானது கலவையான விமர்சனங்களை பெற்றாலும் எதிர்பார்த்த அளவிற்கு பெரியளவிலான வசூல் ஈட்டவில்லை. இதற்கான காரணம் யாதெனில் 'பாய்காட் லால் சிங் சத்தா' என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது தான் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் 'லால் சிங் சத்தா' திரைப்படத்தில் நடித்ததற்கு அமீர்கான் ஊதியம் வாங்கவில்லை என்ற ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. இதற்கான காரணம் என்னவெனில் அமீர்கான் தனது நடிப்புக்கான கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்தால், படக்குழுவிற்கு கிட்டத்தட்ட ரூ.100 கோடி நஷ்டம் ஏற்படும் என்பதால் தான் தனக்கு சேர வேண்டிய ஊதியத்தை வேண்டாம் என அமீர்கான் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்லாது படத்தின் தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இவரின் இந்த பரந்த மனசை பார்த்து பலரும் வியந்ததோடு திரைப்பிரபலங்கள் மட்டுமன்றி ரசிகர்கள் பலரும் இந்த விடயத்திற்கு பாராட்டுத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Listen News!