• Sep 20 2024

ஜெயிலர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி என்ன தெரியுமா?- அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு

stella / 1 year ago

Advertisement

Listen News!

பீஸ்ட் படம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து  எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருந்த நெல்சனுக்கு அடுத்ததாக கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு தான் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார்.

 இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிரூத் தான் இசையமைக்கிறார்.ஜெயிலர் படத்தில் ரஜினி உடன் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் ஷிவ ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், நகைச்சுவை நடிகர் யோகிபாபு, நடிகை தமன்னா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.


 பான் இந்தியா படமாக தயாராகி வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் இப்படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்துவிடும்.இதையடுத்து ஏப்ரல் 14-ந் தேதி இப்படத்தின் டீசரை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த படக்குழு, தற்போது அதற்கு முன்னதாகவே வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது

. அதன்படி வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று ஜெயிலர் படத்தை பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகிறதாம். இதுகுறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.


Advertisement

Advertisement