• Sep 20 2024

ஜெயிலர் படத்தின் ரன்னிங் டைம் என்ன தெரியுமா?- வெளியாகிய சென்சார் முடிவுகள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் தான் ஜெயிலர்.இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ்ராஜ்குமார், பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன், தமன்னா, நடிகர் சுனில், வசந்த் ரவி, யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி என்று ஒரு மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றது.

ஜெயிலர் படத்திலிருந்து ஏற்கனவே காவாலயா மற்றும் Hukum ஆகிய இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது.


முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியின் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாகவுள்ளது.மேலும் இந்த படத்திற்கான சென்சார் பணிகள் முடிவடைந்துள்ளது.

 இந்த படத்தின் முதல் பாதி ஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் என்றும் இரண்டாம் பாதி ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் கொண்டது படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் இருக்கும் என்ற தகவலும் தற்பொழுது வெளியாகி உள்ளது.இதனால் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர். 

Advertisement

Advertisement