தெலுங்கில் வெளிவந்த கேங் லீடர் படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். இதன்பின் தமிழில் என்ட்ரி கொடுத்த பிரியங்கா, சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தில் நடித்திருந்தார். அறிமுக படமும் இவருக்கு தமிழில் படுஹிட்டடித்து 100கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
மேலும் இப்படத்தை தொடர்ந்து சூர்யாவுடன் கைகோர்த்து எதற்கும் துணிந்தவன் படத்தில் கதாநாயகியாக நடித்து மக்களை கவர்ந்தார். அடுத்ததாக சமீபத்தில் வெளிவந்த சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்து தற்போது தமிழ் திரையுலகின் சென்சேஷன் நடிகையாக மாறிஉள்ளார்.
இதுமட்டுமின்றி, விரைவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தலைவர் 169 படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் பிரியங்கா நடிக்கப்போவதாக தகவல் கசிந்தது. ஆனால், இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.
இவ்வாறுஇருக்கையில், நடிகை பிரியங்கா மோகன் கடைசியாக நடித்து வெளிவந்த டான் திரைப்படத்திற்காக ரூ. 50 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளாராம். இதன்முலம், இவர் ஒரு படத்திற்கு ரூ. 50 லட்சம் சம்பளமாக வாங்கி வருகிறார் என்று தெரியவந்துள்ளது.
பிற செய்திகள்
- வெண்பா சொன்ன விசயத்தால் ஷாக்கடைந்த குடும்பம்-சரியான பதிலடி கொடுத்த பாரதி-விறுவிறுப்புடன் வெளியான ப்ரமோ…!
- நடிகை மீனாவின் முழு சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா..? சொக்கிப்போன ரசிகர்கள்..!
- கோபியின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய ராதிகா.. திடீரென வீட்டுக்கு வந்த பாக்கியா..!
- நயன் திருமணத்தை பத்தி கேள்வி கேட்ட பத்திரிகையாளர்-கடுப்பான சீமான்..!
- ஒரே நாளில் வெளியாகும் தனுஷ் மற்றும் சிம்புவின் படம்-பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!