• Sep 20 2024

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் தினேஷ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

stella / 10 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் பல்வேறு புதுமைகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கமாக ஒரு வீட்டில் நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்த சீசனில் மட்டும் இரண்டு வீட்டில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிக்பாஸ் வீட்டில் இருந்து கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர், தனக்கு சுவாரஸ்யம் இல்லாததாக தோன்று 6 போட்டியாளர்களை தேர்வு செய்து அவர்களை ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது விதி.

இந்த வார கேப்டனான பூர்ணிமா, புதிதாக வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்துள்ள அர்ச்சனா, அன்னபாரதி, பிராவோ, கானா பாலா, தினேஷ் ஆகிய 5 பேரையும் தேர்வு செய்து சுமால் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி உள்ளார். 


அதுமட்டுமின்றி ஒரு கருப்பு ஆடாக விசித்ராவையும் அனுப்பி உள்ளனர். சுமால் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் இடையே சண்டையை ஏற்படுத்த வேண்டும் எனக்கூறி பிக்பாஸ் போட்டியாளர்கள் முன்னரே பேசிவைத்து விசித்ராவை அனுப்பி உள்ளனர்.

இந்த நிலையில் இதில் முக்கிய போட்டியாளராக களமிறங்கியிருப்பவர் தான் சீரியல் நடிகர் தினேஷ்.இவர் திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வைல்ட் கார்ட்டு போட்டியாளராக நுழைந்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒரு எபிசோடுக்கு இவர் ரூ. 18 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டு உள்ளே நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement