• Sep 20 2024

விக்ரமன், ஷிவின், அசீம் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெளியானது முழுமையான தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் 6ம் சீஸனின் பைனலில் தற்போது மொத்தம் மூன்று போட்டியாளர்கள் இருக்கிறார்கள். அஸீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூன்று போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். 

இறுதி வாரத்தில் நுழைந்த கதிரவன் மற்றும் அமுதவாணன் ஆகியோர் பணப்பெட்டி உடன் வெளியேற மைனா வாரத்தின் இடையிலேயே எலிமினேட் ஆகிஇருந்தார்.அதனால் தற்போது போட்டியில் இருக்கும் மூவரில் டைட்டில் யாருக்கு என்கிற பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

இவ்வாறுஇருக்கையில்  தற்போது வந்திருக்கும் தகவல்களின்படி அஸுமுக்கு தான் பிக் பாஸ் 6 டைட்டில் கிடைத்து இருக்கிறது. சர்ச்சைகளில் சிக்கினாலும் அவருக்கும் அதிக ஆதரவும் இருந்து வந்த நிலையில் வாக்குகளின் அடிப்படையில் அஸூம் டைட்டிலை வென்றுள்ளார்.


விக்ரமனுக்கு இரண்டாம் இடமும், ஷிவினுக்கு மூன்றாம் இடமும் கிடைத்து இருக்கிறது.இந்த நிலையில்  விக்ரமன், ஷிவின் மற்றும் அசீம் ஆகிய மூவருக்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது.


விக்ரமனுக்கு தினமும் ரூ.18,000 சம்பளம் என்று கூறப்படும் நிலையில் அவர் 105 நாட்கள் இந்த வீட்டில் இருந்து உள்ளதால் சுமார் 18 லட்ச ரூபாய் அவருக்கு சம்பளமாக கிடைக்கும். அதேபோல் ஷிவினுக்கும் ரூ.18,000 தான் சம்பளம் என்பதால் அவருக்கும் அதே அளவு தான் தொகை கிடைக்கும். ஆனால் அசீமுக்கு தினமும் 25 ஆயிரம் சம்பளம் எனக் கூறப்படுவதால் அவருக்கு 25 லட்சத்துக்கு அதிகமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement