• Sep 20 2024

பிக்பாஸ் விக்ரமன் பிளஸ் 2 பரீட்சையில் பெற்ற புள்ளி என்ன தெரியுமா?- ஸ்கூல் டாப்பரா இவர்?

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 9-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது.தற்போது 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் நேற்று ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்பட்டார்.

 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 14 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் ஓபன் நாமினேஷன் தான் நடத்தப்பட்டு உள்ளது. இதில் தாங்கள் வெளியேற்ற விரும்பும் இரண்டு போட்டியாளர்கள் யார் என்பதை தேர்வு செய்து அவர்கள் முகத்தில் கேக் கிரீமை பூச வேண்டும் என பிக்பாஸ் சொல்கிறார்.


 இதையடுத்து ஒவ்வொருவராக வந்து நாமினேட் செய்கின்றனர். அதன்படி இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் ரச்சிதா, குயின்சி, மைனா, கதிரவன், ஜனனி, ஷிவின், தனலட்சுமி, மணிகண்டன் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். 

இது ஒரு புறம் இருந்த இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு ரகர்களின் ஆதரவைப் பெற்று வரும் போட்டியாளர் தான் விக்ரமன். இவருக்கு இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகின்றது. இந்த நிலையில் இவர் கடந்த 2004ம் ஆண்டு பிளஸ் 2 பரீட்சை எழுதியுள்ளார்.


அத்தோடு அதில் 1156 புள்ளிகளைப் பெற்று டாப்பராகவும் இடம் பிடித்துள்ளார். இது குறித்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகின்றது. மேலும் இவர் சென்னையிலுள்ள இராமசுவாமி முதலியார் பாடசாலையில் கல்வி கற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement