• Sep 21 2024

நயன்தாரா என்னும் பெயரின் தமிழ்ப் பதம் என்ன தெரியுமா?- ட்ரெண்ட் ஆக்கி வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் இந்த மாதம் தனது காதலான விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார். இவருடைய திருமணதத்திற்கு பிரபலங்கள் பலரும் சென்றிருந்ததாடு திருமணமும் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

திருமணத்தைத் தொடர்ந்து தற்பொழுது ஹனிமூனுக்கு இருவரும் சென்றுள்ளனர். இது குறித்த புகைப்படங்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது. அத்தோடு முன்னதாக திருமணத்துக்கு பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த நயன்தாரா திருமணத்துக்கு பின்பும் ஊடகத்தினரின் தொடர் ஆதரவு வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் திருமணம் முடித்த பின் அண்மையில் தனது சொந்த ஊரான , கேரளாவிற்கும் சென்று நண்பர்களை சந்தித்தார் . இந்த நிலையில் யாரோ ஒருவர் நயன்தாரா என்ற பெயர் தமிழ்ப்பெயர் கிடையாது என்றால் அந்த பெயருக்கான தமிழ்ப்பெயர் என கேட்க, அதற்கு பிரபல கவிஞர் ஒருவர் 2015-ல் கொடுத்த வளக்கம் ஒன்று தற்பொழுது ட்ரெண்ட் ஆகி வருகின்றது.

அதன்படி, மேற்கண்ட அந்த கேள்விக்கான விடையை கவிஞர் மகுடேஸ்வரன் தனது பேஸ்புக் போட்ட பதிவாவது , “நயன்தாரா’ என்னும் பெயர் தமிழ்ச்சொற்களால் ஆனதில்லை என்பதால் உரியத் தமிழ்ப்பெயர் கூறுக’ என்னும் நண்பரின் பதிவொன்றைப் பார்த்தேன். நயனம் என்றால் கண். தாரா (தாரகை) என்றால் நட்சத்திரம்.

சில நாள்களுக்கு முன்வரை நட்சத்திரம் என்பதற்கு உரியத் தமிழ்ப்பெயர் இல்லையோ என்று வருந்தியிருந்தேன். விண்மீன் என்பதும்கூட கவிதைப்பண்புள்ள உருவகப்பெயர்தான். உடுமலை என்ற ஊர்ப்பெயரை ஆராய்ந்தபோது உடு’ என்பது நட்சத்திரத்தைக் குறிக்கும் தமிழ்ச்சொல் என்பது தெரிந்தது. நயன்தாரா என்னும் பெயரைத் தமிழ்ப்படுத்தினால் ‘உடுக்கண்ணி’ என்று ஆகும்.” என்று கவிஞர் மகுடேஸ்வரன் பதிவிட்டுள்ளார்.

இதை இப்போது ட்ரெண்ட் செய்யும் இணையவாசிகள் அடடே.. நயன்தாரா பெயரை இப்படியும் தமிழ்ப்படுத்த முடியுமா? என ஆச்சரியமாக பேசிவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement