தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் இன்றைய தினம் வெளியாகவுள்ளது. எனவே இப்படத்தை வரவேற்க ரசிகர்கள் இப்போதே தயாராகி விட்டனர். தமிழக அரசு அதிகாலை காட்சிக்கு மறுப்பு தெரிவித்துள்ளதால், தமிழகத்தில் முதல் காட்சி, 9 மணிக்கு தான் துவங்க உள்ளது.
எனவே அண்டை மாநிலங்களான, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி போன்றவற்றில் காலை 7 மணி மற்றும் 4 மணி காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் சிலர் அண்டை மாநிலங்களுக்கு படையெடுத்துள்ளதாக தெரிகிறது.
இது ஒருபுறம் இருக்க, 'லியோ' படக்குழுவினருக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் லியோ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, இப்படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது லியோ பட விமர்சனம் வெளியாகி இருக்கிறது.
ரஜினிகாந்தின் பாட்ஷா படத்தின் டைட்டில் எப்படி இடைவேளையின் போது போடுவார்களோ அதே போலத்தான் லியோ படத்தின் டைட்டில் இடைவேளையில் தான் போடுகின்றனர் என ரசிகர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். லியோ படத்தில் சாண்டி மாஸ்டர் மற்றும் மிஸ்கின் நடிகர் விஜய்யின் இடத்துக்கு சென்று அவருடன் பிரச்சனை பண்ணும் போது, சண்டை நடக்கிறது. கடைசியாக பார்த்திபன் விஜய்யின் குழந்தையை சாண்டி மாஸ்டர் வெறித்தனமாக கொல்லப் போக, துப்பாக்கி எடுத்து, மிஷ்கின் மற்றும் சாண்டியை சுட்டுத் தள்ளும் காட்சிகளை தற்போது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
மாஸ்டர், விக்ரம் படத்தின் இடைவேளை காட்சிகளை விட வேறலெவலில் லியோ படத்தின் ப்ரீ இன்டர்வெல் சீன் ஃபயராக இருக்கிறது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.நடிகர் விஜய் சிறந்த நடிகர் என்று மட்டுமே அவரை பாராட்டும் பலர் அவரது நடிப்பை பெரிதாக பாராட்டியதே இல்லை. அதை உடைத்து விஜய்யின் ரியல் வெறித்தனமான நடிப்பை காட்ட வேண்டும் என துப்பாக்கியை கீழே போட்டு விட்டு விஜய் அழும் காட்சி ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. லியோ திரைப்படம் முதல் நாள் வசூல் 120 கோடியை தாண்டும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Listen News!