• Sep 20 2024

பொல்லாதவன் படத்திற்கு முதலில் வைத்த டைட்டில் என்ன தெரியுமா? அட இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் 2007ல் வெளிவந்த படம் பொல்லாதவன். வெற்றிமாறனின் முதல் படம் அதுதான்.

தனுஷ் ஜோடியாக திவ்யா ஸ்பந்தனா நடித்து இருந்தார். ஒரு பல்சர் பைக் மிடில் கிளாஸ் பையனின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது, ஆனால் அதே பைக் திருடு போகும்போது அதை மீட்க சந்திக்கும் சிக்கல்கள் தான் படத்தின் கதையாக இருக்கும்.

இந்த படத்திற்கு முதலில் 'இரும்புக்குதிரை' என்று தான் வெற்றிமாறன் பெயர் வைத்தாராம். ஆனால் தயாரிப்பாளர் அது சரியில்லை என கூறி மாற்ற சொன்னாராம்.

அதன் பின் தயாரிப்பாளர் சொன்ன டைட்டில் வெற்றிமாறனுக்கு பிடிக்கவில்லையாம். அதுக்கு 'பொல்லாதவன்'னு வெச்சிட்டு போய்டலாம் என வெற்றிமாறன் கோபமாக கூற, அதுவே வெச்சிடலாம் என தயாரிப்பாளர் கூறிவிட்டாராம்.

இந்த டைட்டில் பிடிக்காமல் தனுஷுக்கு போன் செய்து பேசி இருக்கிறார் வெற்றிமாறன், ஆனால் அவருக்கும் இது நல்லா இருக்கு என கூற, வேறு வழியே இல்லாமல் பொல்லாதவன்' என்ற டைட்டில் உறுதியாகி இருக்கிறது.     

Advertisement

Advertisement